Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : பும்ரா இல்லை…. நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.!!

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சூப்பர் 12 சுற்றில் 3 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இறுதிப்போட்டியில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.. இந்த உலகக்கோப்பை தொடர முடிந்த பிறகு நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில்  விளையாடுகிறது இந்திய அணி..

இந்தியாவின் வரவிருக்கும் நியூசிலாந்து மற்றும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான அணிகளை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. இந்திய அணி நவம்பர் மாதம் நியூசிலாந்தில் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 ஆம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25 ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.

நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கி ), சஞ்சு சாம்சன் (வி.கீ ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :

ஷிகர் தவான்(கே), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கீ ), சஞ்சு சாம்சன் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2022 – T20I தொடர் :

முதல் டி20 –  நவம்பர் 18 ஆம் தேதி (ஸ்கை ஸ்டேடியம், வெலிங்டன்)

2ஆவது டி20 – நவம்பர் 20 ஆம் தேதி (பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய்)

3ஆவது டி20  நவம்பர் 22 ஆம் தேதி (மெக்லீன் பார்க், நேப்பியர்)

 

இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2022 – ஒருநாள் தொடர் :

முதல் ஒருநாள் போட்டி –   நவம்பர் 25 ஆம் தேதி (ஈடன் பார்க், ஆக்லாந்து)

2ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 27 ஆம் தேதி (செடான் பார்க், ஹாமில்டன்)

3ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 30 ஆம் தேதி  (ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச்)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. தொடரின் முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியும், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 7ஆம் தேதியும், டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 22ஆம் தேதியும் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்கள் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளனர். அதேபோல காயத்தால் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காமல் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவும் வங்கதேசத்திற்கு எதிரான தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் ஜஸ்பிரிட் பும்ராவின் பெயர் இரு அணிகிடையிலான தொடரில் இல்லை. அதனால் அவருக்கு இன்னும் காயம் குணமாகவில்லை என்பது தெரிகிறது.

வங்கதேச ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே ), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்

வங்கதேச டெஸ்டுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (WK), கே.எஸ். பாரத் (WK), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல். , குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

Categories

Tech |