அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால், மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய் புஜாராவும், ரபடாவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.
அதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், 12 ரன்கள் அடித்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டை இழந்தார். அவரை தொடர்ந்து ரஹானே களமிறங்கி அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியில் ஈடுபட்டார்.
மறுமுனையில் பேட்டிங்கில் அதிரடிகாட்டி வந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது ஆறாவது சதத்தை கடந்தார். ரோஹித் சர்மா 117* (164) ரன்கள் எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் ரஹானேவும் தனது பங்கிற்கு 83* (135) அரை சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் தேனீர் இடைவேளையின் பிறகு ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Bad Light forces early call of play. #TeamIndia 224/3 with Rohit on 117* & Rahane on 83*. Join us for Day 2 tomorrow #INDvSA @Paytm pic.twitter.com/HacyRwPl2m
— BCCI (@BCCI) October 19, 2019