இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயஸ் ஐயர், யுஸ்வேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அகமது ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்து ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டனர்.
#TeamIndia wishes everyone a very Happy Independence Day
Jai Hind 🇮🇳#IndependenceDay pic.twitter.com/z2Ji00T2l0
— BCCI (@BCCI) August 14, 2019