இலங்கை ஜெயராஜ் நலமுடன் உள்ளதாக மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை ஜெயராஜ், இவர் சேர்ந்த சமய பேச்சாளர். இவரை தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அனைவராலும் அழைக்கப்படுபவர். இலக்கியம், சமயம் , தத்துவம் போன்றவை அவரது அறிவு புலங்கள். ராமாயணம், திருக்குறள், சைவ சித்தாந்தம் போன்றவை அவருக்கு மிகவும் பிடித்த இலக்கியங்கள். இவர் அகில இலங்கை கம்பன் கழகம், யாழ்ப்பாணம் கம்பன் கழகம், ஐஸ்வர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர் உடல் நலக் குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்று அரசியல் பிரமுகரின் ட்விட்டர் பக்கத்தில் இன்று மதியம் வெளியானதை தொடர்ந்து அவர் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல் தவறானது என்றும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.