Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேலி பேச்சு… 3 பேர் மீது தீ வைத்து… தானும் தற்கொலை செய்துகொண்ட பூசாரி..!!

பூசாரியை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் மூன்று பேரையும் தீ இட்டு கொளுத்தி, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரை வெங்கடேஷ், சதீஷ்,காலி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி அனுப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று மூவரும் சன்னதி தெரு நூலகம் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ராஜசேகர் பெட்ரோல் கேனை எடுத்து வந்து அவர்கள் மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளார்.  மூவரும் தீக்காயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு மூன்று பேரும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சதீஷ் மற்றும் வெங்கடேஷ் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சையில் உள்ளனர்.

தகவலின்பேரில் கைது செய்ய வந்த போலீசார் மீதும் அவர் பெட்ரோலை ஊற்றி உள்ளார். பின்னர் பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கமாக சென்று அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை மீட்ட போலீசார் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீஸார் கூறுகின்றனர்.

Categories

Tech |