Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

லைவ் வையரின் முதல் எலெக்ட்ரிக் பைக் … சமூக வலைதளத்தில் வைரலாகும் டீசர் ..!!!

ஹார்லி டேவிட்சன் லைவ் வையர் மோட்டார் சைக்கிளின்  டீசரானது   சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது .

அமெரிக்காவின்  ஹார்லி டேவிட்சன் நிறுவனமானது லைவ் வையர் என்ற தனது   முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது . இந்த  லைவ் வையர் மோட்டார்சைக்கிளானது  இந்தியாவில் வரும்  ஆகஸ்ட் 27 ஆம் முதல் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது . மேலும் இந்தியாவில்  இதன் மதிப்பு   ரூ. 19 முதல் ரூ. 20 லட்சம் என அந்நிறுவனம் கூறியுள்ளது .

Image result for லைவ் வயர் மோட்டார்

இந்த  மோட்டார் சைக்கிள்  முன்புறம் செல்ல பெல்ட் டிரைவ் முறை பின்பற்றப்படுகிறது . இதுமட்டுமின்றி இந்த  பைக் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் ,  ஹெச்.டி. கனெக்ட் என அழைக்கப்படும் ஸ்மார்ட் டெலிமேடிக்ஸ் சிஸ்டம் மோட்டார்சைக்கிளின் பேட்டரி சார்ஜ் விவரங்களை சேகரித்து ஹார்லியின் கனெக்ட்டெட் ஆப் மூலம் வாடிக்கையாளருக்கு  வழங்குகிறது  .

 

Related image

மேலும் ,  செல்லுலார் இணைப்பு பெற்ற முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளாக “லைவ் வையர்” இருக்கும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கூறியுள்ளது . குறிப்பாக இந்த புதிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள்  மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் செல்லும் என  ஹார்லி நிறுவனம் கூறியுள்ளது .

Related image

மேலும் , இந்த மோட்டார் சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 177 கிலோமீட்டர் வரை செல்லலாம் என  அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது . இதனுடன்  ரைடு அசிஸ்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல்,  ஏ.பி.எஸ்., இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |