Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தின் டீசர்…. அசத்தல் அப்டேட் கொடுத்த இயக்குனர்….!!!

 

விக்ரம் படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்குகிறார்.

Vikram Movie Cast | Vikram 1986 | Vikram New Movie | Search Around Web

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் ஷிவானி, மைனா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு படத்தின் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விரைவில் இந்த படத்தின் டீஸர், டிரெய்லர், என அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |