Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு அதை கொடுங்க… உயிர் போகும் அபாயம்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மின்கம்பங்களின் மீது ஏறி பணி புரியும் ஊழியர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையம் மூலம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கு பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களின் வேலை மிகவும் கடினமானது. ஏனெனில் வால்பாறை பகுதியில் அதிகளவு மழை பெய்வதால் பாசிகள் படர்ந்து மின்கம்பத்தின் மீது ஏற முடியாத நிலை ஏற்படும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, வால்பாறை பகுதியில் பணிபுரியும் மின் ஊழியர்களுக்கு ஏணியும், நவீன உபகரணங்களும் கொடுக்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து மின்கம்பத்தின் மீது ஏறி வேலை செய்கின்றனர். அப்போது சிலர் மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே தங்களது உயிரை பனையம் வைத்து வால்பாறை பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி பணிபுரியும் மின் ஊழியர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |