காதலர் தினம் உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை காதலர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினம் கொண்டாட வாரத்தின் முதல் நாள்- ரோஸ் டே, இரண்டாவது நாள்-புரோபோஸ் டே, முன்றாவது நாள்-சாக்லேட் டே, நான்காவது நாள்-டெடி டே, ஐந்தாவது நாள்-பிராமிஸ் டே, ஆறாவது நாள்-ஹக் டே, இறுதி நாளான ஏழாவது நாள்-கிஸ் டே என்று முடிகிறது. இந்த நிலையில் நாளை கொண்டாட இருக்கும் டெடி டேவை முன்னிட்டு உங்கள் காதலன்/காதலிக்கு என்ன நிறத்தில் டெடியை பரிசளிக்க போகிறீர்கள். நீங்கள் பரிசு அளிக்கப் போகும் டெடியின் நிறத்திற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சிகப்பு டெடி : பேரார்வம், இரக்கம், அன்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் நிறமாகிறது. காதலன் காதலிக்கு இடையே உணர்ச்சி மற்றும் அன்பில் தீவிரத்தை இது உணர்த்துகிறது.
பிங்க் டெடி : நீங்கள் உங்கள் ஜோடியை ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ப்ளூ டெடி : கடலையும் வானத்தையும் இணைக்கும் நிறமாகும். இது காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிறத்தில் டெடி பெற்றால் உங்கள் மீது அவர் ஆழமான காதலை வைத்திருக்கிறார் என்று அர்த்தமாகும்.
ஆரஞ்ச் டெடி: கொண்டாட்டம், மகிழ்ச்சி, வெளிச்சம், ஆர்வம் மற்றும் பேரார்வம் ஆகியவற்றை இந்த நிறம் வெளிப்படுத்துகிறது. உங்களுக்கு ஆரஞ்சு கலர் டெடி கிடைத்தால் விரைவில் உங்களுக்கு லவ் ப்ரொபோஸ் வரப்போகிறது என்று அர்த்தம்.
வெள்ளை டெடி: இதன் அர்த்தம் ஏற்கனவே கமிட்டட் என்று அர்த்தமாகும். அவரை முயற்சி செய்வதில் பயன் இல்லை. அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பிரவுன் டெடி: இந்த நிறத்தில் டெடி அளித்தால் நீங்கள் அவரின் இதயத்தை காயப்படுத்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த பிரச்சனைக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீர்வு காண்பது நல்லது.