பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சாயிஷா, கருணாகரன் ,சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகி சாயிஷாவின் எனர்ஜி ஒரு டெடி பியர் பொம்மைக்குள் வந்துவிடுகிறது. இதன்பின் அந்த டெடி ஆர்யாவிடம் உதவி கேட்க இருவரும் நண்பர்கள் ஆகிவிடுகின்றனர்.
மேலும் டி இமான் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பிரபல டெடி பியர் ரைம்ஸ் பாடலுக்கு பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ‘என்னுடைய அழகிய நினைவுகளை ஃபீல் பண்ண வைத்தது டெடி திரைப்படம்’ என்று பதிவிட்டுள்ளார்.