காதலர் தினம் உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுவர். அந்த வகையில் பிப்ரவரி 7 தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை காதலர் வாரம் கொண்டாடப்படுகின்றது. இந்த காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே கொண்டாடப்படுகின்றது. பெண்கள் அனைத்து நேரத்திலும் ரசிப்பது டெடி பியரை தான். அவர்கள் டெடி பியரை கொஞ்சும் போது சில நேரத்தில் காதலனையே வெறுப்பேற்றும் அளவிற்கு இருக்கும். அப்படி என்ன வரங்களையும் டெடி பியர் வாங்கி வந்திருக்கும் ? இதோ அதற்கான காரணங்கள்.
டெடி பியரின் தோற்றம் குண்டாக இருப்பதால் அது பெண்களை அதிக அளவில் ஈர்க்கிறது மற்றும் டெடி பியர் பெரிய காதுகளையும் மூக்கையும் கொண்டிருப்பதால் பெண்களை வெகுவாக கவரும். பெண்களுக்குள் இருக்கும் ஒரு குழந்தைதனத்தை டெடிபியர் தான் வெளியே கொண்டு வருகின்றது. அதனை கண்டதும் அவர்கள் குழந்தைபோல குதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெண்களுக்கு சிறந்த தோழனாய் இருப்பது டெடிபியர் தான். ஏனென்றால் அவர்கள் தூங்கும்போது நண்பனைப் போல் கட்டியணைத்து தூங்குகின்றனர். ஏதேனும் கவலையாக இருந்தால் அதனை கட்டியணைத்து அழுவார்கள்.
மேலும் காதலன் அருகில் இல்லாத நேரத்தில் அவரை நினைத்து கட்டி அணைத்து கொஞ்சுவார்கள். சில சமயம் அவர்கள் காதலர் முன் இதை செய்யும்போது காதலரே வெறுப்பேற்றும் அளவிற்கு இருக்கும். வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் போது டெடிபியர் உடன் இருந்தால் அவர்கள் தனியாக இருப்பதை போல் உணர மாட்டார்கள். அவர்கள் அதனுடன் பேசி நடமாடும் போது குழந்தையாகவே மாறி விடுகிறார்கள். பெண்களுக்கு ஏதேனும் கவலை இருந்தால் டெடி பியரை பார்க்கும்போது அதனை மறந்து சிரிக்கத் தொடங்கி விடுவார்கள். அவர்களை பார்த்து டெடிபியர் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வதைப்போல உணர்வார்கள்.