பாகிஸ்தான் நாட்டில் நேற்று இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் ஸ்வாட் மாவட்டத்தில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டிலுள்ள மிங்கோரா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் புள்ளி 4.2 ஆக பதிவாகி உள்ளது .
இந்த தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் , உயிர்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியியாகவில்லை. இதனால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .