புதுச்சேரியில் வேலைக்கு செல்ல தாய் அனுமதிக்காததால் மகள் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பம் நகரைச் சேர்ந்த தம்பதியினர் மண்ணாங்கட்டி -பாக்கியலட்சுமி. இவர்களது ஒரே மகள் திவ்யபாரதி(19) பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். திவ்யபாரதி வேலைக்கு செல்ல விரும்புவதாக தனது தாயாரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது தாயார் மறுப்பு கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் . இதனால் மனவேதனை அடைந்த திவ்யபாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். பின்பு வீட்டின் கதவை உட்புறமாக அடைத்துக்கொண்டு தனது தாயின் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய பாக்கியலட்சுமி வீடு உட்புறமாக பூட்டப் பட்டிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார். பின்பு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் பொழுது தனது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்ய பாரதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.