இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த லட்சுமண லிங்கம் என்பவருக்கும், முத்துமணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கணவன் வரதட்சனை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனால் முத்துமணி அவரது பெற்றோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்று விட்டார். இந்நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி கிளாக்குளத்திற்கு வந்த முத்துமணி இடம் லட்சுமண லிங்கம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது லட்சுமண லிங்கம் தாக்கியதில் முத்துமணி அவரது மூன்று மாத குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மூன்று மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
முத்து மணியின் பெற்றோர்கள் லட்சுமணன் மற்றும் அவரது தந்தையின் பெயரில் புகார் அளித்தனர். மேலும் 3 மாத குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவரை கைது செய்ய உத்தரவாதம் அளித்த பின்னர் அங்கிருந்து சென்றனர்.