உத்திர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் அருகே ஜோயிடா தாலுகாவில் சிவபுரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காளி நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் காரில் இப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது தொங்கு பாலத்தின் மீது காரை ஓட்டி சென்றுள்ளனர். இதற்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை இளைஞர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதனையடுத்து உள்ளூர் கிராம மக்கள் அங்கு வந்து வாலிபர்களை கண்டித்துள்ளனர். இதனால் வாலிபர்கள் வேறு வழியின்றி பாலத்தை விட்டு காரை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாலிபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் சமீபத்தில் கூட குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.