வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள நாகக்குடையான் வாடிவெளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் வீட்டிலிருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.