இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது .
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடராக இருப்பதால், தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இந்திய அணியுடன் சென்றுள்ளார். இதையடுத்து இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாட உள்ளது .
இந்தப் போட்டி வருகின்ற ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை என்பதால் , அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த இலங்கை தொடரில் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி வந்தது . இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி ,செயலாளர் ஜெய் ஷா இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர் .