Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆவணத்தை கேட்டதால் தகராறு…. தாசில்தார் மீது தாக்குதல்…. ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தாசில்தாரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தி.மு.க பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் இருக்கும் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் தனி தாசில்தாராக பாத்திமா சகாயராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த அலுவலகத்திற்கு  தி.மு.க நகர பொருளாளர் கோபி என்பவர் சென்றுள்ளார். அவர் தாசில்தாரிடம் சர்வே எண் 1-ஐ கொடுத்து அது யார் பெயரில் இருக்கின்றது என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிறகு கோபி மற்றொரு சர்வே எண்ணை கொடுத்து அதன் விவரங்களை கேட்டுள்ளார். அப்போது அதற்குரிய ஆவணத்தை தாசில்தார் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து காயம் ஏற்பட்டதாக கூறி தாசில்தார் மற்றும் கோபி ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நில அளவை ஆய்வாளர் குணசேகரன் கோபி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபியிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர் சிகிச்சையில் இருந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதற்கிடையில் தனி தாசில்தாரை தாக்கிய கோபியை கண்டித்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பூட்டி விட்டு கோஷமிட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |