Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரணம் : லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை முதுகில் சுமந்து சென்ற தாசில்தார்… குவியும் பாராட்டுக்கள்!

கோவையில் கொரோனா நிவாரண பொருட்களாக லாரியில் வந்த அரிசி மூட்டைகளை தாசில்தார் தனது முதுகில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆதரவின்றி பலரும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் சமுதாய சமையல் கூடம் அமைக்கப்பட்டு தினந்தோறும் 500 பேருக்கு மூன்று வேளை இலவசமாக உணவு தயார்செய்து வழங்கப்படுகின்றது. இந்த பணிகள் அனைத்தும் கோவை வடக்கு  வட்டாட்சியர் டி.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்று வருகின்றது. உணவு சமைப்பதற்காக பொதுநல அமைப்பினர், தன்னார்வலர்கள் என பலரும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றார்கள்.

Image

இந்த நிலையில் நேற்று வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மினி லாரியில் வந்து இறங்கியது. அப்போது உடனே தாசில்தார் மகேஷ்குமார் தொழிலாளர்களுடன் சேர்ந்து நிவாரண பொருட்களை லாரியில் இருந்து இறக்கினார். அவர் நேரம் கடத்தாமல் இருக்க தாமாக முன்வந்து 75 கிலோ மற்றும் 25 கிலோ அரிசி மூட்டைகளை லாரியில் இருந்து முதுகில் தூக்கி சுமந்தபடியே உணவு தயாரிக்கும் அறைக்கு  கொண்டு சென்றார்.

Image

தாசில்தாரின் இந்த செயலை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும்  அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டினர். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த பலரும் வட்டாட்சியர் மகேஷ்குமாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Categories

Tech |