தெய்வமகள் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த வாணி போஜனுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது .
இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா . இதன் பிறகு இவர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை . இந்நிலையில் நடிகை ரேகா கிருஷ்ணப்பா மார்டன் உடையில் அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது . நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாரா இது? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளது இந்த புகைப்படம் .