எந்த தொழில் சங்கத்திலும் இணைய மாட்டோம் என்று தெரிவித்தால் பணி வழங்கப்படுமென்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றியது போல எங்களையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டுமென்று தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய தெலுங்கானா மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டுமென்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு போராட்டம் நடத்திய ஊழியர்களின் கோரிக்கையையும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி போராட்டம் நடத்தும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அம்மாநில முதல்வர் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை முடிந்த பின்பு உத்தரவிட்டார். இதனால் 48,000 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். முதலவரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு புதிதாக பணிக்கு வருபவர்கள் எந்த தொழில் சங்கத்திலும் இணைய கூடாது என்று உறுதி அளித்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படுமென்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.