Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் மகிழ்ச்சி அளிக்கிறது” நிர்பயா தயார் கருத்து…..!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முகமது பாஷா, சிவா, நவீன், கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு நாடு முழுவதும் பெரும்வரவேற்பு  கிடைத்த்து வரும் நிலையில், இந்த தண்டனை மகிழ்ச்சி அளிக்கிறது என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |