தெலுங்கானாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா மாநிலம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில், நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொது ஊரடங்கு தொடங்கும் என்று தெரிவித்ததோடு, பல்வேறு தளர்வுகள் குறித்து அறிவிப்பையும் வெளியிட்டது.
மேலும் தளர்வுகள் குறித்து மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என கூறி தளர்வுகள் அறிவிப்புக்கான அதிகாரத்தை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு காண உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
அந்தவகையில் தற்போது, தெலுங்கானாவில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவை முதல்வர் சந்திரசேகராவ் பிரிப்பித்துள்ளார். மாஸ்க் அணியாவிட்டால் ஆயிரம் அபராதம் வைக்கப்படும் என்று எச்சரித்துள்ள முதல்வர், ஐதராபாத்தில் மட்டும் ஆட்டோ டாக்சி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆட்டோவில் இரண்டு பேரும், டாக்சியில் மூன்று பேர் மட்டுமே பயணிக்க முடியும். கட்டுப்பாடு பகுதியை தவிர மற்ற பகுதிகளிலும் கடைகளைத் திறக்கலாம். ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்பட அனுமதி என்றும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்