வாட்ஸ்அப்க்கு இணையாக டெலிகிராமையும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக டெலிகிராம் பிரீமியம் என்ற கட்டண சந்தா சேவையை ஜூன் கடைசியில் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இலவச சேவை வழங்கும் டெலிகிராம், பெரிய கோப்புகள், வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் புதிய அறிவிப்பின் படி ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு வழங்கும் சேவையில் மாற்றம் இல்லை. ஆனால் இனி கூடுதலாக கொண்டுவரப்படும் வசதிகள், பெரிய பைல்கள், அனுப்பும் வசதி மட்டும் கட்டண சேவையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.