Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஒழிக்க: “டெலிமெடிசன் முறை” 4 வழிமுறை போதும்…. கலெக்டர் தகவல்….!!

மதுரையில் டெலிமெடிசன் முறை நல்ல பலன் தருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று முதலே ஒரு புதிய நடவடிக்கையை அம்மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதாவது, டெலிமெடிசன் என்ற முறை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தும் வசதி இருக்கும் பட்சத்தில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பின் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களது மொபைல் எண்ணுக்கு மருத்துவர்கள் கால் செய்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கி, அவர்களை குணம் அடையச் செய்வார்கள்.

தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் 350க்கும் மேற்பட்டோர் மதுரையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அவர், இது நல்ல பலனை கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.  அதேபோல் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் வசதி இருந்தால் மட்டுமே அவர்கள் வீட்டில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள். வசதி இல்லாதவர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனையிலும், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறை திட்டமானது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்படும் திட்டம்.

வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் பாதிக்கப்படுவதற்கு முன் செய்ய வேண்டிய நான்கு முக்கியமான வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் அது என்னவெனில், 1. வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 2. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 3.தங்களது கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். 4. சளி, காய்ச்சல், தொண்டை வலி,.மூச்சுத் திணறல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |