சென்னையில் ஜனவரி28 ஆன இன்று தொலைபேசி நாளாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் அலைபேசி இல்லாத நாட்களை நினைத்து கூட பார்க்கமுடியாது. தொலைபேசி என்பது நேரடியாக பேச முடியாத தொலைவில் இருப்பவர்களுடன் பேச பயன்படும் ஒரு தொலைநோக்கு கருவி.1881 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சேவையை ஏற்படுத்த இங்கிலாந்தை சேர்ந்த ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி சென்னை ரபால செட்டி தெருவில் 1881 ஆம் ஆண்டு ஒரு தொலைபேசி நிலையத்தை தொடங்கியது. அப்போது அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வெறும் 93 பேர் மட்டுமே இருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னை ஜார்ஜ்டவுன் பகுதியைச் சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அந்த வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள்தான்.
அவ்வாறு உருவான தொலைபேசி நிலையத்தின் மூலம் முதலாவது தொலைபேசி அழைப்பால் ஜார்ஜ் கோட்டையில் இருந்து சென்னை மாநகர் கவர்னருக்கும் பவுண்டரி என்ற ஏற்றுமதி கம்பெனியின் முதலாளிக்கும் அந்த இணைப்பு கொடுக்கப்பட்டு பேசப்பட்டது ஜனவரி 28 தான்.
அடுத்த ஆண்டான 1882இல் இந்தியாவில் தந்தி மற்றும் தொலைபேசி சேவைகள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் ஒருங்கிணைக்கப்பட்டது. இக்கருவியை ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பவர் காப்புரிமம் பெற்றார் என்று கூறப்படுகிறது. அனால் 1849, 1875 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பல நாட்டு ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து தொலைபேசி தொடர்பான பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.