பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பரின் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு ‘ஜிஸம் 2’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சன்னி லியோன். அதைத் தொடர்ந்து ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் இந்தி மட்டுமல்லாது சில தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்தும், தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார்.
கூகுள் வலைதளத்தில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நபர் என்ற பெருமையையும் அவர் அடைந்தார். அமித் பச்சன், ஷாருக் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் இவர் அந்தப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியிருந்தார். சன்னி லியோன் திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டவராக அவர் விளங்குகிறார்.
டேனியல் வெப்பர் என்ற நடிகரை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் சன்னி லியோன். அதன்பின்னும் படங்களில் நடித்த சன்னி லியோன் – வெப்பர் தம்பதியினர் 2017ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர். அக்குழந்தைக்கு ‘நிஷா கவுர்’ என பெயரிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தாண்டே இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாயின் மூலமாக பெற்றனர்.
இதனிடைய தங்களின் முதல் குழந்தை நிஷாவின் நான்காவது பிறந்தநாளை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கொண்டாடிய சன்னி லியோன் அந்தப் புகைப்படங்களையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இன்று தனது கணவர் டேனியல் வெப்பரின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து சன்னி லியோன் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய வலைதளங்களில் பதிவிட்டர்.
அந்தப் பதிவில் அவர், ‘இத்தனை வருடங்கள் உங்களுடன் ஒன்றாக இருந்தும் உங்கள் மீது உள்ள நான் எப்படி காதல் கொண்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் பலம், வீரம், அழகு, அன்பு, பாதுகாப்பான, தன்னமற்ற கணவராகவும், அப்பாவாகவும் உள்ளீர்கள். என் அன்புக்கு பிறந்தநாள் வாழ்த்து’ என தெரிவித்திருந்தார். மேலும் தங்களின் குழந்தைகள் அவர்களின் அப்பாவின் பிறந்தநாளுக்காக உருவாக்கிய ஓவியத்தையும் சன்னி லியோன் பதிவிட்டிருந்தார். நடிகை சன்னி லியோன், தமிழிலில் வீரமாதேவி படத்திலும், கோக்ககோலா இந்தி படத்திலும் நடித்துவருகிறார். இதுதவிர ‘காமசூத்ரா’ வெப் சீரியலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.