இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தொடர்ந்து 9வது நாளாக நாடு முழுக்க இன்று பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனத்தை பதிவவிட்டு வரும் நிலையில் அதை காமெடியாக நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறார்கள். இயற்கை படத்திலிருந்து “காதல் வந்தால் சொல்லி அனுப்பு” என்ற பாடலையும் பாடல் காட்சிகளை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது இந்த மீம்ஸ் வைரலாக பரவியுள்ளது.
இதையடுத்து இந்த பாடல் எழுதிய வைரமுத்து இதுகுறித்து ட்விட் செய்துள்ளார். என்னுடைய பாடலை மாற்றி எனக்கே அனுப்புகின்றனர். “காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த படம் வந்து பல வருடங்கள் ஆனாலும் காதல் பாடலான இந்த பாடல் பெட்ரோல் டீசல் விலையை உயர்வால் நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகி வருகிறது.