Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்பி வந்துட்டேனு சொல்லு…! ”ஹைதராபாத்தை” அலற விட்ட ”சென்னை” …!!

சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.13) நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் – ராயுடு இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. சிஎஸ்கே அணியில் வாட்சன் 42 ரன்களையும், ராயுடு 41 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வார்னர், மனீஷ் பாண்டே இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தது. இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவ் – வில்லியம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் பேர்ஸ்டோவ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் அரைசதமடித்து அசத்தினார்.

இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், ஹைதராபாத் அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.

Categories

Tech |