கர்ப்பமாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் தனது குழந்தையின் பெயரை ரசிகர்கள் தேர்வு செய்து சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய மொழி அனைத்திலும் தனது இனிமையான குரலினால் பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தன் காதனான ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரும் அவர் பல மொழிகளில் பாடுவதில் பிஸியாக இருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதற்கு பல்வேறு திரைப்பட பலன்களும், ரசிகர்களும் ஸ்ரேயா கோஷலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து ஸ்ரேயா கோஷல் தன் குழந்தையின் பெயரை ரசிகர்கள் முடிவு செய்து சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “நாங்கள் எங்கள் குழந்தையின் பெயரில் பற்றி இதுவரை யோசிக்கவில்லை. நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கேட்டுள்ளோம். நான் இப்போது என் ரசிகர்களிடமும் கேட்க விரும்புகிறேன். அவர்கள் கண்டிப்பாக ஒரு அர்த்தமுள்ள, தனித்துவமான பெயரைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள்” என்று கூறியுள்ளார்.