Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு தடவை ”வணக்கம்” செலுத்த சொல்லு… நாம எல்லாருமே ”பள்ளர்கள்” தான்: நச்சுன்னு விளக்கிய சீமான் …!!

நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீ தேவரா எந்திருச்சு போ, தேவேந்திரனா எந்திரிச்சு, போ, 2 பேரும் ஒன்னா நின்னு பாரு. எவ்வளவு ? நீ முதல்ல வரலாற்றில் நீ யாரு ?  முதல்ல நீ யாரு ? நம்ம எல்லாரும் குறவர்கள்…  குறைப்பய மக்கள். கூச்சபடாத வரலாறை நீ படிக்கலைன்னா…  அண்ணன் படிச்சிருக்கல,  கற்பிக்கிறல,  அதை கத்துக்க. மண் தோன்றுவதற்கு முன்னே மலை தோன்றிடுச்சு. மலையில் மனிதன் தோன்றிட்டான்.  அவன் தான் தமிழன் என்கிறான்.

அவன் யாரு ? குன்றில் வாழ்ந்தால் அவன் குன்றவன். உச்சரிப்பில் ”இன்” குன்றி.. ”இன்” ஒலி குன்றி குன்றி குறவர் ஆயிடுச்சு. அதனால நம்ம எல்லாரும் யாரு ? குறைப்பய மக்கள் தான். அதான் ஆதிக்குடி. அங்கிருந்து கீழே இறங்குகின்றோம்.  அங்க என்ன வேலை செஞ்சுகிட்டு இருந்த ?  வேட்டையாடிட்டு இருந்த… ஆடு,  மாடுகளை வேட்டையாடி சாப்பிட்ட…  விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்ட….  காய்கறி,  கிழங்குகளை சாப்பிட்ட…

சுணையில ஓடுகிற தண்ணீரை சாப்பிட்ட….  தேனாடையை எடுத்து தின்னுட்டு இருந்த…  அப்படியே கீழ இறங்கி வந்த…  அது முல்லை நிலம். என் முல்லை நிலம் ?  சின்ன சின்ன பூக்களாக இருக்கின்ற முல்லைப் பூக்கள் அடர்ந்து பூத்திருந்ததால்,  அந்த திணைக்கு பெயர் முல்லை. நம்ம முன்னோர்கள் நிலத்தை வகுக்கும் போது பகுக்கிறார்கள். அங்கு குறிஞ்சி மலர்கள் அதிகமா இருந்தது. இங்கே முல்லை மலர் அதிகமா இருந்தது. இது முல்லை நிலம். அங்கு காடும், காடு சார்ந்த இடமும்…  மலையும்,  மலை சார்ந்த இடமும்…

”குறிஞ்சி” மலையும்,  மலை சார்ந்த இடமும்…  காடும் காடு சார்ந்த இடமும் ”முல்லை”. இந்த நிலத்தில் கீழே இறங்கி வருகின்றோம்… இதுவரை வேட்டையாடி உண்ட விலங்குகளை நம்ம என் வளர்த்து சாப்பிடக்கூடாது என முடிவு பண்றோம். ஆடு,  மாடு மேய்க்க தொடங்குகின்றோம்.  வளர்க்க தொடங்குகின்றோம்.  யார் வளர்த்தது ? நான் தான்..  நீ தான்… வளர்க்கத் தொடங்கும் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள் யாரு ?  ஆயர்கள்,  கோன்.

ஏன் அவன் கோன் ? அந்த இன கூட்டத்தின் தலைவனுக்கு  ஒரு கோல் கொடுக்கிறான். அந்தக் கோலை வைத்திருக்கிறதுனால,  அவன் கோன். கோன் என்றால் என்ன ? அரசன். இதை சொல்றதுக்கு உனக்கு அவமானமா இருக்கு,  வெட்கமாக இருக்கு.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான் – என்று ஔவையார் பாட்டி பாடுகிறார்.

கோன் என்றால் யாரு ? அரசன்..  நீ அரசன் என்பதை விடப் பெருமையா ? இருப்பதற்கு ஏன் யாதவ் போட்ட…  உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். அது எந்த மொழி சொல் சொல்லு. அவனும் ஆடு மேய்க்கிறேன், நானும் ஆடு மேய்க்கின்றேன். அவனும் மாடு மேய்க்கிறேன், நானும் மாடு மேய்கின்றேன்.  நான் கோன் அவனை லல்லுபிரசாத் பிரசாத் கோன் என போட சொல்லு. நான் யாதவன்னு போடுறேன்.

ஒன்னும் வேணாம்…  நம்ம வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோனுக்கு படத்தை வைத்து…  ஒரே ஒரு தடவை மெழுகுவர்த்தி கொளுத்தி அல்லது பூவை போட்டு ”வணக்கம்” செலுத்த சொல்லு,  செய்ய மாட்டான்.. இத சொன்னா உனக்கு கோவம் வந்துருது. எங்களுக்கு இது பண்ணிட்டு என…  ”அரசன்” என்கிறத விடவா உனக்கு பெருமை வந்துடுது. தமிழ் இனத்தின் இரண்டாவது பெரிய தாய் கூட நீ தான் …  அதுக்கப்புறம் கீழே வருகின்றோம்.

பிறகு நடந்து நடந்து கீழே வருகின்றோம். இதற்க்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகுது. கீழ வந்ததும்….  அங்க உடனே நீரை பார்க்கிறோம்… அருவி, ஆறு ஓடுது. அங்க தான் நிலைத்து வாழ தொடங்குறோம். குளிக்கிறோம்,  நாகரீகம் அடைகின்றோம். நிலைத்து வாழ தொடங்குறோம். நகர்ந்து,  நகர்ந்து நாடோடிகளாக வந்த கூட்டம்…  இங்க நிலைக்குது, அங்க நிக்கிறோம். அங்கு மருத மரங்கள் நிறைய இருக்கு.. அதனால் ”மருதத்தினை” என பெயர் வருது.

அங்கெல்லாம் பூக்கள்..  இங்க மரம்.  அப்பதான் அந்த இடத்தில் என்ன பண்ணுறோம். இங்கே  நிலம் பள்ளமா இருக்கு. அங்க குன்றில் வாழ்ந்தோம்,  அதனால குன்றவர்கள். இங்க வந்தோம்…  மருத திணைக்கும் – குறிஞ்சி திணைக்கும் இடையில் வாழ்ந்ததால் நாம்  இடையர்கள். அது குடிப்பெயர் அல்ல,  காரணப்பெயர். நம்ம குடிப்பெயர் கோன் – ஆயர். நல்லா விளங்கிக்கணும்… கீழே வந்தோம் நிலம் பள்ளமா இருந்துச்சு. அங்கு வந்து சேர்ந்த நம்ம எல்லாருமே ”பள்ளர்கள்” தான். இங்கே இருக்கிற எல்லோருமே பள்ளப் பயல்கள்தான். அதை நல்லா விளங்கிக்கனும் என தெரிவித்தார்.

Categories

Tech |