Categories
தேசிய செய்திகள்

அமைச்சரே சொல்லிட்டாங்க..! ”கருத்தை கேட்டு நடுங்கிய சீனா” மாஸ் காட்டும் இந்தியா …!!

இந்தியா – சீனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள்.  சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங்  இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து இந்த விவகாரம் சம்பந்தமாக விளக்கம் அளித்தார்.

பின்னர் சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், தூதரக ரீதியிலும் பிரச்சனை கையாளப்பட்டு சற்று பதற்றம் தணிந்துள்ளது. இதன் பின்னர்  இந்த தாக்குதலை அத்துமீறி நடத்திய சீனாவுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் சீனாவுக்கு எதிரான கண்டன குரல் எழுப்பினர்.

சீனாவின் பொருளை தடை செய்ய வேண்டும், சீனாவின் செயலிகளை தடை செய்யவேண்டும் மத்திய அரசு இதற்கான முடிவை எதுவேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரே அப்படியான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். பொதுமக்களும் அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் இது சீனாவை நடுங்க வைத்துள்ளது.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவேண்டும். சீன உணவுகளை இந்தியர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கிறார். மத்திய அரசின் இந்த கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் பெரிய சந்தையாக இருக்கும் இந்தியா சீனா பொருட்களை புறக்கணித்தால் பொருளாதாரரீதியாக சீனா பெரும் சரிவை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |