கோவை அருகே வீட்டில் நகை பணம் ஏதும் இல்லாததால் காரை திருடியதோடு ஆத்திரத்தில் வீட்டு சுவரை இடித்து தள்ளி திருடன் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் நரசிம்ம பாளையம் பகுதியை அடுத்த ஜோதி காலனியில் வசித்து வருபவர் ஹென்றி. இவரது மனைவி குன்னூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மகள் ஜென்னி தாயுடன் ஒரே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜென்னிக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
அவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குன்னூரில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து அருகில் உள்ள கல்லூரிக்கு தாயும் மகளும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வார விடுமுறை மட்டும் காலனியில் உள்ள வீட்டிற்கு சென்று விடுவார் அந்தவகையில் இம்முறை சென்றிருந்தபோது திருடர்கள் வீட்டிற்குள் சென்று நகை பணம் இருக்கிறதா என்பதை பீரோவில் உள்ள துணிகளை களைந்து ஆராய்ந்துள்ளனர்.
ஆனால் எதுவும் கிடைக்காத விரக்தியில் கார் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து கோபத்துடன் காரை எடுத்துக்கொண்டு கொண்டு கேட் உடன் இணைக்கப்பட்டிருந்த சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு காரை திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஹென்றி மற்றும் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வீட்டை பார்வையிட்டு கைரேகைகளை சேகரித்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.