இதுகுறித்து சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ’வரும் 2020ஆம் ஆண்டு பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை வரும் 20ஆம் தேதிக்குள் சரிபார்த்து மண்டல அலுவலத்திருக்கு அனுப்பவேண்டும். ஏற்கனவே மாணவர்களின் விவரங்களை சரி பார்க்க அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனாலும் சில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை திருத்தங்கள் செய்ய வேண்டுமென அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், மீண்டும் கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.அதன்படி வரும் 20ஆம் தேதிக்குள் மாணவர்கள் விவரங்களில் திருத்தங்கள் இருந்தால், திருத்தும் செய்து மண்டல அலுவலகங்களில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் விவரங்களை தவறாக பதிவு செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.