கொரோனா நோய் குறித்த செய்திகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பத்திரையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தினமும் மாலையில் கொரோனா நோய் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஏராளமான குளறுபடிகள் செய்து வருகிறார்கள். ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ரிப்போர்டிங் பார்மெட் தொடர்ந்து மாற்றப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதன்முதலாக 16 வகையான தகவல்களுடன் தினசரி செய்திக் குறிப்பு வெளியிட்டார்.
இன்றைக்கு 10 வகை தகவலுடன் முக்கிய தகவல்களை மறைத்து செய்திக்குறிப்பு வெளியிடுகிறார்கள். ஏப்ரல் 24 ஆம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான படுகைகள், வென்டிலேட்டர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் செய்திக்குறிப்பில் வெளியாகவில்லை.கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்த தகவல்கள் மே 9ம் தேதிக்கு பிறகு வெளியாகவில்லை. ஆனால் கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கோயம்பேடு தொடர்பான தொற்று விவரங்களை தொடர்ந்து வெளியிட்டன.
நோய் யார் மூலம் தொற்றியது அல்லது புதிதாக நோய் வந்ததா ? என்பது குறித்த தகவல் ஏதும் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இல்லை. தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளை எவ்வளவு படுக்கைகள் நிரப்பப்பட்டு இருக்கின்றன ? என்பது குறித்த தகவல்கள் ஜூன் 3-ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டு விட்டன. உண்மை நிலையை மறைப்பதற்காக தான் மாற்றி மாற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். இப்படி இந்த அரசின் கொரோனா குளறுபடிகளை சொல்லிக்கொண்டே போகலாம் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.