Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை சொல்லுங்க- முக.ஸ்டாலின் அறிக்கை

முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுள்ளார்.

வெளிநாட்டில் முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் அமைச்சர்களுடன் இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று கிளம்பிய தமிழக முதல்வர் வருகின்ற 10_ஆம் தேதி தான் தமிழகம் திரும்புகின்றார். 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது , முக.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செல்வது மர்மமாக உள்ளது என்று விமர்சித்தார்.முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

அதிமுக சார்பில் முதல் இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததா? முதலீட்டாளர் மாநாடு முடிந்து 7 மாதங்கள் கழித்து வெளிநாடு போவது ஏன் முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லாமல்  உள்நோக்கம் கற்பிப்பது ஏற்புடையது அல்ல. நான் வெளிப்படையாக மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர் தனது பயணம் பற்றி விளக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |