தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் காலமானார்.
தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் காலமானார். 39 வயதான வேணு மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம் உட்பட 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.