Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் பிரியாமணி… எந்தப் படத்தில் தெரியுமா?…!!!

நடிகை பிரியாமணி தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகை பிரியாமணி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் . இவர் இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் . இதையடுத்து நடிகை பிரியாமணிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தாலும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை . இதன் பின்னர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் .

After Venkatesh, Now Priyamani to work with Chiranjeevi? - tollywood

இதையடுத்து பல வருடங்களுக்குப் பிறகு வெப்சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பு நடிகை பிரியாமணிக்கு கிடைத்தது . இதை சரியாக பயன்படுத்திய பிரியாமணி தற்போது  தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து  நடிகை பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |