Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்க்கு கொரோனா அறிகுறி… ட்விட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்க்கு கொரோனா அறிகுறி இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்தது . இதையடுத்து தமிழில் தயாராகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதை அவர் மறுத்தார் .

இந்நிலையில் நடிகை அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை அனுசுயா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த என் பயணத்தை ரத்து செய்து விட்டேன் . தற்போது என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் . என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள் , தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |