Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு ரீமேக் படத்தில் ஹீரோவாகும் சந்தானம்… வெளியான தகவல்கள் …!!!

நடிகர் சந்தானம் தெலுங்கு ரீமேக் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் சந்தானம் . இவர்  டிக்கிலோனா ,சர்வர் சுந்தரம், பாரிஸ் ஜெயராஜ், மன்னவன் வந்தானடி, சபாபதி என ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

Santhanam's rare old video as local TV VJ turns viral! - Tamil News -  IndiaGlitz.com

தெலுங்கில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீ நிவாச ஆத்ரியா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சந்தானம் நடிக்க இருக்கிறார் . இந்தப்படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . மேலும் வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்த படத்தை இயக்க உள்ளார் . விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |