புளியமரத்தின் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகரில் அம்மையப்பா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அம்மையப்பா தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை டெம்போ வேனில் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த வேனை முத்துராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து குரும்பபாளையம் பகுதியில் வைத்து முத்துராஜ் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது டெம்போ வேன் மோதி விட்டது.
இதனால் படுகாயமடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அம்மையப்பாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் உயிரிழந்த முத்துராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.