Categories
உலக செய்திகள்

இந்தியா, பாகிஸ்தானில்…. 30 மடங்கு உயர்ந்த வெயில் அளவு… 90 பேர் உயிரிழந்ததாக தகவல்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அளவு 30 மடங்கு உயர்ந்திருக்கிறது.

உலக நாடுகள் முழுக்க காலநிலையில் அதிகமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வெப்பநிலை அளவானது 30 மடங்கு உயர்ந்திருப்பதாக லண்டனின் காலநிலை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்  தெரிவித்திருக்கிறார்.

காலநிலை மாற்றம் மனிதர்களால் உண்டாகவில்லை எனில் இவ்வாறான வெப்பம் ஆயிரம் வருடங்களுக்கு பின்பு தான் உண்டாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வருடத்தில் கடுமையான வெயில் ஏற்பட்டிருப்பதால் 90 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்

Categories

Tech |