Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை, திருத்தணியில் இன்று 108℉ வெப்பநிலை பதிவு… மேலும் 6 இடங்களில் சுட்டெரித்த வெயில்!!

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெளியில் கொளுத்தியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து, வேலூரில் 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், கடலூரில் 107,  ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் 105, நாகையில் 104, சேலத்தில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே தொடங்கியது. கடந்த 4ம் தேதி முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டது. பொதுவாக கோடை வெயில் தொடங்கினாலே வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும். ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் ஆரம்பித்ததில் இருந்து அதிகபட்ச வெப்பநிலை 35- லிருந்து 38 ஆக பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாடுகளாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி செல்வதால் பெரும் அவதியாகி உள்ளது.

இதுஒருபுறம் இருக்க இன்று கமுதி அருகே உள்ள கிளாமரம், ராமசாமிபட்டி, மேலராமநதி ஆகிய கிராமங்களில் அரை மணி நேரமாக கன மழை பெய்தது. அதேபோல மேலும் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்தது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெயில் ஒருபுறம் மக்களை வாட்டி எடுக்க தமிழகத்தின் சில பகுதிகளில் மேற்குவங்க கடல் புயல் காரணமாக ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் உள்ளது.

Categories

Tech |