தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், புதுவை, நாகப்பட்டினம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
ஜூன் 20ம் தேதியில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஜூன் 20ம் தேதியில் இருந்து ஜூன் 23ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.