Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேரை திரளாக இழுத்த பக்தர்கள்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா..!!

திண்டுக்கல்லில் பழனி மாரியம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாசித்திருவிழாவில் தேரை இழுத்து விழாவை சிறப்பித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மாரியம்மன் கோவில், பழனி முருகன் கோவிலின் உபகோவில் ஆகும். இந்த கோவிலில் சென்ற மாதம் 12ஆம் தேதி மாசி திருவிழா தொடங்கியுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி கொடியேற்றமும், 16ஆம் தேதி கம்பம் சாட்டுதலும் மற்றும் பூவோடு வைத்தல் ஆகிய நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியுள்ளது. இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து விழாவை சிறப்பித்துள்ளனர்.

இந்த விழாவில் உதவி ஆணையர் செந்தில்குமார், கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, கந்த விலாஸ் உரிமையாளர்கள் நவீன், செல்வகுமார், நரேஷ், அறங்காவலர் குழு தலைவர் சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், ராகவன், தனசேகர், அப்புகுட்டி, ஹோட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து, அ.தி.மு.க நகர செயலாளர் முருகானந்தம், சரவண பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்று மாலை 5 மணி அளவில் அம்மனுக்கு நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து இரவு 10 மணி அளவில் கொடி இறக்குதல் நிகழ்ச்சியோடு விழா நிறைவுபெற உள்ளது.

Categories

Tech |