மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது விமர்சையாக நடை பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி பெரியார் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேளதாளங்கள் முழங்க காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று உள்ளனர்.
இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி உள்ளனர். அதன்பின் இரவு கரகம் வீதி உலா சென்றுள்ளது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம மக்கள் சிறப்பாக செய்து திருவிழாவை விமர்சையாக கொண்டாடி உள்ளனர்.