பாதுகாப்பு கொடுக்க வந்த போலீஸ் அதிகாரி தீ மிதித்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சி பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதா மாதம் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவியும் வண்ணம் இருப்பார்கள். இரவு முழுவதும் நடைபெறும் உற்சவத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
அதேபோன்று வருடம்தோறும் தீமிதி திருவிழா நடத்தப்படுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் அக்கோவில் பக்தர்கள். இம்முறையும் தீமிதி விழாவிற்காக பக்தர்கள் விரதமிருந்து தீமிதி குண்டத்தில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்க்க வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் போலீஸ் சீருடையுடன் தீமிதி விழாவில் கலந்துகொண்டு திடீரென தீக்குண்டத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார். அவர் அவ்வாறு செய்ததை பார்த்த பக்தர்கள் அனைவரும் வியந்து போயினர்.