பக்தர்கள் இன்றி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமிக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு மஞ்சள், இளநீர், பன்னீர், பால், சந்தனம், விபூதி, தயிர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அதன் பின் சுவாமிக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கோவிலில் சுவாமிக்கு பக்தர்கள் இல்லாமல் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்று உள்ளது.