Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஜம்முனு நடந்த வருஷாபிஷேகம்… குவிந்த பக்கதர்கள் கூட்டம்… களைகட்டிய தி.மலை …!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகின்றது. இதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடைபெற்றதில் அருணாச்சலேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்துள்ளது. அதன்பின் 6 மணிக்கு மேல் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் வீதியுலா நடைபெற்றுள்ளது.

இந்த ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர்கள் கவனித்துக் கொண்டனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |