Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்திலும் திருப்பதி வரப்போகுது… ஏழுமலையான் கோவில்… முதல்வர் அடிக்கல் நாட்டினார்…!!

ஏழுமலையான் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் அதாவது ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கிறது.

மேலும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையையும் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, அமைச்சர் சிவி சண்முகம் போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |